உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்களுக்கு அன்னதானம்

மக்களுக்கு அன்னதானம்

பல்லடம், ; பல்லடத்தில், ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு, காங்., கட்சியினர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.பல்லடம் நகர, வட்டார காங்., கட்சி சார்பில், சிறப்பு பூஜை அர்ச்சனை பொங்காளி அம்மன் கோவிலில் நடந்தது. திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபிநாத் பழனியப்பன் தலைமை வகித்தார். நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டாரத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன் முன்னிலை வகித்தனர். முன்னதாக, சிறப்பு பூஜையை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மூத்தநிர்வாகிகள் சதாசிவம், அர்ஜுனன், சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை