உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோ-கோ போட்டி ; 73 அணிகள் பங்கேற்பு

கோ-கோ போட்டி ; 73 அணிகள் பங்கேற்பு

உடுமலை: மடத்துக்குளம் வட்டாரம் ஓட்டமடம் யுனைடெட் பப்ளிக் பள்ளியில், கோவை சகோதயா பள்ளிகளுக்கு இடையிலான, கோ - கோ சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர்சீனியர் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.போட்டியில், சப் - ஜூனியர் பிரிவில், 21 அணிகள், ஜூனியர் பிரிவில், 23 அணிகள்,சீனியர் பிரிவில், 17 அணிகள், சூப்பர் சீனியர் பிரிவில், 12 அணிகள் என மொத்தமாக, 73 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தது.துவக்க விழாவில், யுனைடெட் பள்ளி முதல்வர் பாலமுருகன் கொடியேற்றினார். செயலாளர் சுமதி விழாவை துவக்கி வைத்தார்.திருப்பூர் மாவட்ட கோ - கோ அசோசியேஷன் தலைவர் துரை, செயலாளர் கெம்புராஜ் முன்னிலை வகித்தனர். கோவை கோ - கோ அசோசியேஷன் உறுப்பினர்கள் 16 பேர் போட்டிகளின் நடுவர்களாக செயல்பட்டனர்.சப் - ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவில், கோவை எம்.டி.என்., பியூச்சர் பள்ளி அணி முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளது. சப் - ஜூனியர் பிரிவில், கோவை ஸ்ரீ விவேகானந்தா பப்ளிக் பள்ளி இரண்டாவது இடத்திலும், அவினாசி ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி மூன்றாமிடத்திலும், குரும்பம்பாளைம் ஆதித்யா குளோபல் பள்ளி நான்காம் இடமும் பெற்றன.ஜூனியர் பிரிவில், மதுக்கரை பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளி இரண்டாமிடமும், அவினாசி ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி மூன்றாமிடத்திலும், கோபிசெட்டிபாளையம் சாரதா இன்டர்நேஷனல் பள்ளி நான்காமிடமும் பெற்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன. சிறப்பாக விளையாடிய எம்.டி.என்., பியூச்சர் பள்ளி மாணவர்கள் அம்ருத், மவுனஹர்சன், பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவர் நகுல்குமார், விவேகானந்தா பப்ளிக் பள்ளி மாணவர் திசந்த் உள்ளிட்டோருக்கு, யுனைடெட் பப்ளிக் பள்ளி சார்பில் சிறப்பு கோப்பைகள் வழங்கப்பட்டன. யுனைடெட் பப்ளிக் பள்ளி இயக்குனர் லட்சுமிப்ரியா நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை