உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு கேபிளோ வெறும் 8 ஆயிரம் தனியார் இணைப்போ 3 லட்சம்

அரசு கேபிளோ வெறும் 8 ஆயிரம் தனியார் இணைப்போ 3 லட்சம்

திருப்பூர்;திருப்பூரில், தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள், மாதம் 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன.அரசு கேபிள் டிவி இணைப்புக்கு, 184 ரூபாய் அளவிலேயே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக சேனல்; குறைந்த கட்டணம் என்பதால், பெரும்பாலானோர், அரசு கேபிள் இணைப்பு பெறுவதையே விரும்புகின்றனர்.அரசு கேபிளே இல்லைஅதேநேரம், எச்.டி., பாக்ஸ் இல்லாதது, ஒளிபரப்பு தடை போன்ற அரசு கேபிளின் குறைகளை பட்டியலிட்டு கூறி, தனியார் கேபிள் இணைப்பு வசம் மக்களை ஆபரேட்டர்கள் இழுத்துவிடுகின்றனர். சில இடங்களுக்கு இணைப்பு வழங்க, அரசு கேபிள் ஆபரேட்டர்களே இல்லாத நிலையும் உள்ளது. வேறுவழியில்லாமல் பெரும்பாலானோர், தனியார் கேபிள் இணைப்பு பெறவேண்டிய நிலை ஏற்படுகிறது.பனியன் தொழிலாளர் மிகுந்த திருப்பூர் வடக்கு, தெற்கு தாலுகா பகுதி குடியிருப்பு பகுதிகளில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தனியார் கேபிள் டிவி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன; ஆனால், அரசு கேபிள் நிறுவனத்தின் 8 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.சொல்வது சரிதானா?''அரசு இணைப்பில் எச்.டி., பாக்ஸ் இல்லாததால், யாரும் விரும்புவதில்லை என்று ஆபரேட்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், 30 சதவீத மக்களே எச்.டி., பாக்ஸ் மற்றும் எச்.டி., சேனல்களை எதிர்பார்க்கின்றனர். எச்.டி., சேனல்களுக்கு அதிககட்டணம் செலுத்தவேண்டியிருப்பதால், 70 சதவீதம் பேர், சாதாரண பாக்ஸ்களை பயன்படுத்தவே விரும்புகின்றனர். தமிழக அரசு, தடையில்லா ஒளிபரப்பை உறுதி செய்யவேண்டும்; விரைவில் எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்கவேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு, ஆபரேட்டர்கள் அரசு கேபிள் இணைப்பு வழங்க முனைப்புகாட்டவேண்டும்.அரசு செட்டாப் பாக்ஸ்களை முடக்கிவைத்துள்ள ஆபரேட்டர்களுக்கு பதில், வேறு புதிய ஆபரேட்டர்களுக்கு உரிமம் வழங்கி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்கிறார் அரசு கேபிள் டிவி டிஜிட்டல் சிக்னல் வினியோகஸ்தர் ஒருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி