உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு ஊழியர் சங்க கிளை மாநாடு

அரசு ஊழியர் சங்க கிளை மாநாடு

திருப்பூர்;தாராபுரத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் நடத்தும் முதலாவது வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது.இதையொட்டி, சங்க கொடியை மாவட்ட தலைவர் பழனிசாமி ஏற்றி வைத்தார் . தொடர்ந்து, அரசு ஊழியர்கள் பங்கேற்ற ஊர்வலம் தாலுகா அலுவலகம் முன் துவங்கி, தமிழ் கலை மன்றம் முன் முடிவடைந்தது.கிளை மாநாட்டில் மாநில, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்ய வேண்டும், முடக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஊதியம் மற்றும் பண பலன்களை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வட்டக்கிளைத் தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சாந்தி, அஞ்சலி தீர்மானம் வாசித்தனர். முன்னதாக துணைத்தலைவர் சிவகுமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி துவக்கி வைத்துப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை