உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குட்கா பறிமுதல் வழக்கு: வீடு, கடைகளுக்கு சீல்

குட்கா பறிமுதல் வழக்கு: வீடு, கடைகளுக்கு சீல்

அவிநாசி : பெருமாநல்லூரில் கோவை - சேலம் பைபாஸ் சாலையில் கடந்த 24ம் தேதி, ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இரு சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்ட 1026 கிலோ அளவிலான குட்காவை பெருமாநல்லுார் போலீசார் பறிமுதல் செய்தனர்.காரில் இருந்த நபர்கள் தப்பினர். அதன் பின், 27ம் தேதி நியூ திருப்பூர் பகுதியில் பெருமாநல்லுார் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, குஜராத் மாநில வாகன பதிவின் கொண்ட சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.காரில் 632 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பெருமா நல்லுார் போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் 22, மற்றொரு தினேஷ்குமார் 21, அவிநாசியில் வசிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த ஜோராராம் 26, டூராராம் 24, மாதாராம், 26 பெருமாநல்லுாரில் வசிக்கும் ஓபாராம் 30, கோபாராம் 35 ஆகிய ஏழு பேரை கைது செய்து 239 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட 1,658 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று சொகுசு கார்களை யும் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், எஸ்.ஐ., பாரதிராஜா உள்ளிட்ட தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.கடத்தி வரப்பட்ட குட்காவை விற்பனைக்கு வாங்கி பலருக்கும் சப்ளை செய்யும் முக்கிய நபராக செயல்பட்ட அவிநாசி, போஸ்ட் ஆபீஸ் வீதியில் பல சரக்கு கடை நடத்தி வந்த மாதாராம், டூராராம் ஆகியோரின் கடை, வீடுகளுக்கு, வருவாய்த்துறையினர் நேற்று 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி