உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குட்கா: ரூ.3.75 லட்சம் அபராதம்

குட்கா: ரூ.3.75 லட்சம் அபராதம்

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பினர் இணைந்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தினர். 14 கடைகளிலிருந்து 17 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கு, மொத்தம் 3.75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, 94440 42322 என்கிற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ