உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குட்கா: இருவர் கைது

குட்கா: இருவர் கைது

அனுப்பர்பாளையம்:அனுப்பர்பாளையம் போலீசார் வாவிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் காரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. போலீசார் விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரிஸ்மன்ராம், 32, மோகன்லால், 31, ஆகிய இருவரும் பெங்களூரில் இருந்து, திருப்பூருக்கு புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது.இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, 12 கிலோ புகையிலை பொருட்கள், 90 ஆயிரம் ரூபாய் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ