உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீரன் சின்னமலைக்கு நாளை வீர வணக்கம்; கொங்கு நாடு விவசாயிகள் கட்சி அழைப்பு

தீரன் சின்னமலைக்கு நாளை வீர வணக்கம்; கொங்கு நாடு விவசாயிகள் கட்சி அழைப்பு

திருப்பூர் : சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு, கொங்கு நாடு விவசாயிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.கொங்குநாடு விவசாயிகள் கட்சி மாநில தலைவர் கொங்கு முருகேசன், பொதுச்செயலாளர் கொங்கு ராஜாமணி மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது:பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தி, ஆங்கிலேயர்களால் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு வீர மரணம் எய்தியவர் தீரன் சின்னமலை.அவரது 219ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, ஆக., 3ம் தேதி(நாளை) நடைபெறவுள்ளது.அவருக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கொங்கு நாடு விவசாயிகள் கட்சி சார்பில் ஆண்டு தோறும் ஆடி 18ம் நாளில் நடத்தப்படுகிறது.அவ்வகையில் நாளை, இந்நிகழ்ச்சி காங்கயம் ரோடு காயத்ரி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. காலை 10:00 முதல் 11:00 மணி வரை வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் பங்கேற்கின்றனர்.தொடர்ந்து தீரன் சின்னமலை நினைவிடம் அமைந்துள்ள ஓடாநிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அமைப்பினரும், பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை