உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீடு கட்டும் பணி துவக்கம்

வீடு கட்டும் பணி துவக்கம்

பழங்குடியினர் மேம்பாட்டு நிதி திட்டத்தில், தாராபுரம் தாலுகா, சி.அம்மாபட்டி பகுதியில், 31 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதற்காக, ஒரு வீட்டுக்கு 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 1.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. கலெக்டர் கிறிஸ்துராஜ், சி.அம்மாபட்டியில் வீடு கட்டுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்கவேண்டும் என, அறிவுறுத்தினார். ஆர்.டி.ஓ., செந்தில் அரசன், தாசில்தார் ஜெகஜோதி, பி.டி.ஓ.,க்கள் சிவகுருநாதன், எத்திராஜ், உதவி பொறியாளர் சசிகுமார் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை