உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எப்படி இருந்தது நீட் தேர்வு?

எப்படி இருந்தது நீட் தேர்வு?

'நீட்' தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் பேட்டி:9. தாவரவியல் கடினம்முதல் முறையாக தேர்வு எழுதியுள்ளேன். இயற்பியல், வேதியியல், தாவரவியில், உயிரியல் ஆகிய பகுதிகளில் கேள்விகள் கேட்கப்பட்டது. இயற்பியல் மற்றும் தாவரவியலில் இடம்பெற்றுள்ள கேள்விகள் கடினமாக இருந்தது. மற்ற கேள்விகள் எளிதாக இருந்தது. கேட்கப்பட்ட கேள்விகளில் பாதி, மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ள பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெற்று இருந்தது.- வர்ஷினி, பொங்கலுார்.10. வேதியியல் எளிதுஏற்கனவே பலமுறை தொடர்ந்து பயிற்சி எடுத்து கொண்டதால், தேர்வை எதிர்கொள்ள எளிதாக இருந்தது. உயிரியல், வேதியியல் போன்ற வினாக்கள் எதிர்பார்த்த அளவுக்கு மிகவும் எளிதாக இருந்தது. ஆனால், இயற்பியல் மட்டும் கடினமாக இருந்தது.- திவாகர், அலங்கியம்.11. எதிர்பார்த்த கேள்விகள்முதல் முறை எழுதுகிறேன். தேர்வு அறைக்குள் போனதும், லேசான பதட்டம் இருந்தது. எழுத ஆரம்பித்த உடன் தெரியவில்லை. இயற்பியல் மட்டும் மிகவும் கடினமாக இருந்தது. வேதியியல், உயிரியல் என மற்ற பகுதிகளில் இருந்த கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தது. எதிர்பார்த்த கேள்விகள் பலவற்றை வந்தது.- ஹரிணி, இடுவம்பாளையம்12. இயற்பியல் கஷ்டம்இம்முறை, இயற்பியல் சார்ந்த பகுதிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தது. அதில், 'சம்ஸ்' தொடர்பான கேள்விகள் அதிகம் இருந்தது. பதில் அளிக்க சிரமம் இருந்தது. மற்றபடி, வேதியியல், உயிரியல் என மற்ற பகுதிகள் எல்லாம் ரொம்ப எளிமையாக இருந்தது. முதல் முறை எழுதினாலும், எளிதாக அணுக முடிந்தது._ சம்பிரிதா, முருகம்பாளையம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி