உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சொல்லாமல் தான் வருவேன்: சேகர்பாபு

சொல்லாமல் தான் வருவேன்: சேகர்பாபு

பல்லடம்;பல்லடம் பொங்காளி அம்மன், அருளானந்த ஈஸ்வரர் மற்றும் மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில்களில், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். 'பொங்காளி அம்மன் மற்றும் அருளானந்த ஈஸ்வரர் கோவில்களில் புனரமைப்பு பணிகள் ஏன் இவ்வளவு தாமதம் ஆகின்றன? இரண்டு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும்' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அமைச்சர் ஆய்வின்போது, கோவிலில் இருந்த பெண் ஒருவர், அமைச்சருக்கு தண்ணீர் கொடுத்து வரவேற்றார். 'நீங்கள் வருவது தெரியாது; தெரிந்திருந்தால் வேறு ஏதாவது தயார் செய்திருப்போம்' என்று அப்பெண் கூறினார். இதற்கு அமைச்சரோ, ''தகவல் சொல்லிவிட்டு வந்தால் கூட்டம் சேர்ந்து விடுவதால், சுதந்திரமாக கோவிலை பார்க்க முடியவில்லை. எனவே, முடிந்த அளவு சொல்லாமல் தான் வருகிறேன்'' என்றார்.முத்துக்குமாரசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர், அர்ச்சகர்கள் கொடுத்த மாலையை தான் அணியாமல், அருகிலிருந்த அறங்காவலர் குழு மாவட்ட தலைவர் கீர்த்தி சுப்பிரமணியத்துக்கு அணிவித்தார். அவர் மாலையை வாங்க மறுக்க, 'நீ சொல்வதைத்தான் நான் கேட்க வேண்டுமா?' என்று கூறி மாலையை அவர் கழுத்தில் அணிவித்தார். முன்னதாக, அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு வழிபட்டார்.அறநிலையத்துறை இணை ஆணையர் குமர துரை, துணை ஆணையர் செந்தில்குமார், கோவில் செயல் அலுவலர் (பொறு ப்பு) சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை