உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சரிவர மூடப்படாத குழி பொதுமக்களுக்கு ஆபத்து

சரிவர மூடப்படாத குழி பொதுமக்களுக்கு ஆபத்து

அவிநாசி;அவிநாசி பேரூராட்சியில் உள்ள நான்கு ரத வீதிகளில், தேர் வரும் பாதையில் உள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.இதற்காக, பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. தோண்டப்பட்ட குழிகளில்,நடந்து செல்பவர்களும், டூவீலர்களும் சிக்கி அவ்வப்போது சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டது. நேற்று கிழக்கு ரத வீதியில் டூ வீலரில் வந்த தாயும், மகனும் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து அதன்பின், வந்த மற்றொரு டூவீலரும் குழியில் சிக்கியது. இதில், அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அருகில் இருந்தோர், குழியை சுற்றிலும் தடுப்புக் கற்கள் வைத்து எச்சரிக்கை செய்யும்படி சிவப்பு வண்ண கொடியையும் நட்டு வைத்தனர். குழியை உடனே சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி