உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலக்கிய மன்ற துவக்க விழா: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

இலக்கிய மன்ற துவக்க விழா: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

உடுமலை;உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நடந்த, இலக்கிய மன்ற துவக்க விழாவுக்கு, கல்வி நிறுவன செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் மீனாட்சி வரவேற்றார்.பள்ளி தலைமையாசிரியர் பூரணி முன்னிலை வகித்தார். திருமூர்த்திமலை பரஞ்ஜோதி யோகா கல்லுாரி தமிழ் பேராசிரியர் சுப்ரமணியசிவா, 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற தலைப்பில் பேசினார்.மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இலக்கிய மன்ற துவக்க விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிகளை தமிழாசிரியர் சேசநாராயணன் தொகுத்து வழங்கினார். பள்ளி உதவி தலைமையாசிரியர் குமரேசன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை