உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பால் சொசைட்டி கட்டடத்துக்கு விமோசனம்

பால் சொசைட்டி கட்டடத்துக்கு விமோசனம்

பல்லடம்;ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, 2 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டிருந்த பால் சொசைட்டி கட்டடம் கட்டுவதில் விமோசனம் கிடைத்துள்ளது.பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி, மலையம்பாளையத்தில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 17 லட்சம் ரூபாய் செலவில், சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு கட்டுமான பணி கடந்த, 2022ல் துவங்கியது.கட்டுமான பணி நடந்துவரும் பால் சொசைட்டி கட்டடம் அமைந்துள்ள நிலம், அரசு புறம்போக்கு நிலம் அல்ல. இங்குள்ள தனியார் கோவிலுக்கு சொந்தமானது என்றும், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் பால் சொசைட்டி கட்டடத்தை அகற்றி நிலத்தை மீட்டுத் தருமாறும், ஒரு தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இதனால், கட்டுமான பணி பாதியில் கைவிடப்பட்டதால், பால் சொசைட்டி கட்டடம் கட்டுவதில் இழுபறி ஏற்பட்டது. கடந்த ஓராண்டாக, வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், ''இது கோவில் நிலம் அல்ல; அரசு புறம்போக்கு நிலம் என்பதால், பால் சொசைட்டி கட்டடம் கட்டுவதில் தடை இல்லை'' என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.இதனால், இரண்டு ஆண்டாக கிடப்பில் உள்ள பால் சொசைட்டி கட்டட கட்டுமான பணி மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்