உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அனல் பறக்கப்போகும் இந்தியா - பாக்., போட்டி வெற்றி யார் பக்கம்; ரசிகர்கள் டென்சன்

அனல் பறக்கப்போகும் இந்தியா - பாக்., போட்டி வெற்றி யார் பக்கம்; ரசிகர்கள் டென்சன்

'டி - 20' உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், பிரதானக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. அமெரிக்க அணி, பாகிஸ்தானை வென்றது வியப்பை ஏற்படுத்தியது. உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி இரவு, 8:00 மணிக்கு நடக்கவுள்ளது. யார் வெல்வர் என்ற எதிர்பார்ப்பு, இருக்கையின் நுனியில் ரசிகர்களை அமர வைக்கும். திருப்பூர் கிரிக்கெட் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்... பார்ப்போம்.சிறந்த பேட்டிங் வரிசைசுனில்குமார், ராயபுரம்: வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடும், நம் இந்திய வம்சாவளி வீரர்கள் அந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதை பார்க்கும் போது, உலக கோப்பை தொடர் பெருமையாக உள்ளது. நடப்பு உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள பப்புவா நியூ கினியா நாட்டுக்கென தனி மொழி கூட இல்லை. வெற்றி, தோல்வி எல்லாம் அப்புறம். ஆனால், இப்படி ஒரு அணியை உருவாக்கி, உலக கோப்பை தொடருக்கு அழைத்து வந்ததே பெரிய விஷயம்; இந்த அணி தொடரில் பங்கேற்க வந்ததே பாராட்டுக்குரிய விஷயம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், அணி கட்டாயம் ஜெயிக்கும். அர்ஷ்தீப் தடுமாறலாம். ரோஹித், கோலி, ஹர்திக் பண்டியா கட்டாயம் ரன் குவிப்பர். பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. தற்போதுள்ள, பேட்டிங் ஆர்டரே சரியானது. அதுவே, இன்றைய போட்டியில் தொடர வேண்டும்.ஜெய்ஸ்வால் களமிறங்கணும்மணி, காமராஜ் நகர்:கிரிக்கெட் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது, 43 வயதில் உகாண்டா பந்துவீச்சாளர் பிராங்க் நுசுபுகா நான்கு ஓவர் வீசி, நான்கு ரன் மட்டும் கொடுத்து, இரண்டு விக்கெட் கைப்பற்றி, பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக உலக சாதனை படைத்திருக்கிறார்.பாகிஸ்தானை விட பலம் வாய்ந்த அணியாக நாம் இருக்கிறோம். அதே நேரம், நியூயார்க் மைதானம், பந்துவீச்சுக்குச் சாதகமான மைதானம். நாம் பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருக்கலாம்.ரோஹித் கூட தடுமாறலாம். இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலை சேர்க்கலாம். ஒரு பேட்டர் அதிகமாகும்; ஜெய்ஸ்வால் பவுலிங்கும் செய்வர். கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் களமிறங்கினால், ஆறு பவுலர் இருப்பதால், நாம் ஜெயிக்க கூடுதல் வாய்ப்பாக இருக்கும்.கடுமையானதாக இருக்கும்கவுதம், கருவம்பாளையம்:புதிய அணி மட்டுமல்ல; அனைத்து அணிகளுக்கும், புதிய மைதானங்கள் சவாலானவை தான். ஒவ்வொரு பந்தும் வெவ்வேறு மாதிரி எழுகின்றன.பாகிஸ்தானில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும் சூப்பர் ஓவரில் தடுமாறியிருக்கிறது. டி-20 கிரிக்கெட்டை பொறுத்தவரை எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். புதிய அணிகள் கூட 'சூப்பர் 8' சுற்றை கடந்து, அடுத்த சுற்றுக்கு வரலாம்.ஏற்கனவே, ஒரு போட்டியில் அமெரிக்காவுடன் தோல்வி அடைந்து விட்டதால், இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் களமிறங்குகிறது, பாகிஸ்தான். பாகிஸ்தானுடான போட்டி என்பதால், நம் அணியும் வெற்றிக்கு போராடும். எனவே, இப்போட்டி கடுமையானதாக இருக்கும். நம் பவுலர் பும்ரா, அர்ஷ்தீப்சிங் கைகொடுக்கலாம்.-------

பந்துவீச்சாளர்கள் திறமை காட்டுவர்

போதிய மைதான வசதி இல்லாத நிலையில், மைதானங்களை உடனுக்குடன் தயார்படுத்தி, அமெரிக்கா போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது. ரெடிமேடு மைதானம், ஒரு ஆச்சர்யம் தான். நம் நாட்டில் இருக்கும் அளவுக்கு, அமெரிக்காவில் கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்களா என்றால் இல்லை.இதுவரை, 20 நாடுகள் பங்கேற்ற போட்டி நடந்ததே இல்லை என்பது இத்தொடரை பலரும் காண்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. பாகிஸ்தான் பயிற்சியாளராக உள்ள கேரி கிரிஸ்டன். நம் அணி 2011ல் டி20 கோப்பையை பெறுவதற்கு காரணமாக, பயிற்சியாளராக இருந்தார்.நுணுக்கங்களை எளிதில் அறிந்து வைத்திருப்பார். இன்றைய போட்டியில் நாம் கவனமாக இருக்க வேண்டும். சரியான தலைமை இல்லாததால், பந்துவீச்சு தடுமாற்றத்தால், தென் ஆப்ரிக்கா அணியுடன் இலங்கை தோல்வியை தழுவியது.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என இருந்த ஆசிய அணிகளின் வரிசை, வங்கதேசத்துக்கு பின் இலங்கை என்ற நிலைக்கு வந்து விட்டது. நாம் பாகிஸ்தானுடன் தோற்கவே கூடாது. நம் பந்துவீச்சாளர்கள் திறமை காட்ட வாய்ப்புள்ளது.பும்ராவை நம்பலாம். நம் பேட்டிங் வரிசை தரமானது. ஸ்கோர் அதிகமாக அடித்து விட்டால், பிரச்னை இல்லை. கவனமுடன் விளையாட வேண்டியது அவசியம்.- அகிலன், கிரிக்கெட் பயிற்சியாளர்.'பவர்பிளே' தான் வெற்றியை தீர்மானிக்கும்நம் நாடு நடத்தும் ஐ.பி.எல்., போட்டி. அதில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களால் தான். ஆர்வமுடன், 20 அணிகள் உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளன. நியூயார்க் மைதானத்தில், 150 ரன்களை கடப்பதே சிரமம். இம்மைதானத்தில் பந்துவீச்சு தான் ஆதிக்கம் செலுத்தும். வேகப்பந்து வீச்சாளர்கள் கட்டாயம் ஜொலிப்பர். வெற்றியை பந்துவீச்சாளர்களே தீர்மானிப்பர். துவக்கம் முதலே போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று, பாகிஸ்தான் அணியையே அமெரிக்கா வீழ்த்தியுள்ளது. அமெரிக்கா, அயர்லாந்து இரு அணிகளும் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறலாம். நமீபியா, எதிர்பார்த்ததை விட நன்றாகவே விளையாடுகிறது.இந்தியா - பாக்., போட்டி பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகும் என்பதால், வீரர்களுக்கு தான் கூடுதல் பிரஷர். இருந்தாலும், நம் அணிக்கு கோலி துவக்கமாக இருப்பதும், பாண்டியா மிடில் ஆர்டர் இறங்குவதும் சிறப்பானதாக இருக்கும். இரண்டு இடது கை சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஜடேஜா பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடலாம். முதல் ஆறு ஓவர் 'பவர் பிளே' தான் இன்றைய வெற்றியை முடிவு செய்யும்.- அசோக்குமார், கிரிக்கெட் பயிற்சியாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை