உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இந்தியன் என்றால் பெருமிதம்; சுதந்திரத்தின் உன்னதம்

இந்தியன் என்றால் பெருமிதம்; சுதந்திரத்தின் உன்னதம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.திருப்பூர் மாநகர எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் தேசிய கொடி ஏற்றினர். மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகம், வடக்கு, தெற்கு தீயணைப்பு துறை வளாகம், மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.n திருப்பூர் மாவட்ட கோர்ட்டில், முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன் தேசிய கொடியை ஏற்றினார். தலைமை குற்றவியல் நீதிபதி செல்லதுரை, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு நீதிபதிகள் ஸ்ரீகுமார், பாலு, கூடுதல் மாவட்ட நீதிபதி ஸ்ரீதர், மாஜிஸ்திரேட்கள் மற்றும் வக்கீல்கள், கோர்ட் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.n திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லம் நகர், பாரப்பபாளையம், கே.வி.ஆர்., நகர் பள்ளிகளில் நடந்த சுதந்திர தின விழாவில், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, தேசிய கொடியேற்றினார். தலைமையாசிரியைகள் அருணா, விஜயலட்சுமி, பத்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.n திருப்பூர், மேட்டுப்பாளையம் வெங்கடேசபுரம் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் முன், 'குமரன் வாலிபர் சங்கம்' சார்பில், தேசிய கொடியேற்றப்பட்டது. ஊர் தலைவர் செல்வராஜ், கொடியேற்றினார். ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் இளைஞர் சேவா சங்கத்தின் சார்பில், ஊர் பெரிதனம் வெங்கடேஷ், கொடியேற்றினார்.n வெங்கடேசபுரம் காமராஜர் தேசிய மன்றத்தின் சார்பில் நடந்த நிகழ்வில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் கவிஞர் சிவதாசன், கொடியேற்றினார்.n கருவலுார் வட்டார பனியன் செக்ஷன் உரிமையாளர்கள் சார்பில், கருவலுார், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், கானுார், ராமநாதபுரம், உப்பிலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.n திருப்பூர், முத்தணம்பாளையம் பைவ் ஸ்டார் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு, பள்ளி குழந்தைகளுக்கு பென்சில், பேனா வழங்கப்பட்டது.

பல்லடம்

n பல்லடம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், சுதந்திர தின கொடியேற்று விழா நடந்தது. சார்பு நீதிபதி சிவா தலைமை வகித்தார். நீதிபதிகள் சித்ரா, காளிதாசன் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரவீந்திரன், செயலாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்தனர்.n பல்லடம் நகர காங்., சார்பில், கரையாம்புதுாரில், சுதந்திர தின கொடியேற்று விழா நடந்தது. நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார் வட்டாரத் தலைவர் கணேசன், வர்த்தகப்பிரிவு மாவட்ட தலைவர் மணிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.n பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பில், அனுப்பட்டி கிராமத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஜே.ஜே.நகர் குடியிருப்பு பகுதியில், வீடு தோறும் தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. சமூக ஆர்வலர் கூட்டமைப்பு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.n திருப்பூர் தெற்கு ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில், அருள்புரம் - தண்ணீர்பந்தல் பகுதியில், மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தேசிய கொடியேற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குரு, ஒருங்கிணைப்பாளர் கோகுல் விஷ்ணு மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.n உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில், காரணம்பேட்டை உழவாலயம் அலுவலகத்தில், ஊடகப்பிரிவு திருப்பூர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.n பல்லடம் வட்டார த.மா.கா., சார்பில், பனப்பாளையம் பகுதியில், நகர தலைவர் முத்துக்குமார் தலைமையில், இளைஞர் அணி நகர செயலாளர் உத்தேஷ் கொடியேற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் ஜெகதீசன், பொதுச் செயலாளர் சின்னசாமி, இளைஞர் அணி பொதுச் செயலாளர் கார்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் அன்சாரி உட்பட பலர் பங்கேற்றனர்.n பொங்கலுார் பி.வி.கே.என்., மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஜெயபால் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் மாணவர் ராமமூர்த்தி, தமிழ் ஆசிரியர் சிவகுமார் உட்பட பங்கேற்றனர்.

அவிநாசியில்...

n அவிநாசி ஒன்றியம், புஞ்சை தாமரைக் குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 78வது சுதந்திர தின விழா நடைபெற்றது. மின் மோட்டார் ஆப்ரேட்டர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், ஊராட்சி செயலர் அங்கு லட்சுமி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.n அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஊர் மக்கள் சார்பில், பள்ளிக்கு 65 ஆயிரம் ரூபாய் மதிப்பில், டேபிள், சேர்,நோட் புக்ஸ், குழந்தைகள் சேர், பக்கெட் என கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை