உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிந்துவெளி பண்பாடு பயிலரங்கு

சிந்துவெளி பண்பாடு பயிலரங்கு

அவிநாசி: அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க அவிநாசி கிளை மற்றும் நவீன மனிதர்கள் சார்பில், சிந்துவெளி பண்பாடு நுாற்றாண்டை முன்னிட்டு மாணவர்களுக்கு பயிலரங்கு நடந்தது.கல்லுாரி முதல்வர் முனைவர் நளதம், த.மு. எ.க.ச., மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், பாரதி சுப்பராயன் வாழ்த்துரை வழங்கினர்.'தொல்லியல் அடிப்படையில் வரலாற்று சின்னங்களை கண்டறிவோம்,' என்ற தலைப்பில் வரலாற்று ஆய்வாளர் பொன்னுசாமி, 'கொங்கு நடு கற்கள்' குறித்து ரமேஷ்குமார், 'காலம் நடந்த பெருவழி' என்ற தலைப்பில் சூழலியாளர் கோவை சதாசிவம், 'பாறை ஓவியங்கள்' குறித்து வரலாற்று ஆய்வாளர் சதாசிவம் ஆகியோர் பேசினர். கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மணிவண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை