உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவ, மாணவியருக்கான கலை பயிற்சி துவக்கம்

மாணவ, மாணவியருக்கான கலை பயிற்சி துவக்கம்

கோவை மண்டல கலை பண்பாட்டுத்துறையின் கீழ் திருப்பூர், கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஜவஹர் சிறுவர் மன்றத்தில், ஐந்து முதல் 16 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு, கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது கோடைக்கால கலைப்பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. பரதநாட்டியம், குரலிசை, யோகா, ஓவியப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. வரும் 14ம் தேதி வரை, தினமும் காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை பயிற்சி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு, 96779 65555 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். பயிற்சி நிறைவு செய்வோருக்கு, சான்றிதழ் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை