உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காய்கறி நாற்று நடவு தீவிரம்: மழைக்கு பிறகு வேகம்

காய்கறி நாற்று நடவு தீவிரம்: மழைக்கு பிறகு வேகம்

உடுமலை;கோடை மழைக்குப்பிறகு, தக்காளி நாற்று நடவு உள்ளிட்ட காய்கறி சாகுபடி பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.உடுமலை வட்டாரத்தில் காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு உற்பத்தியாகும், தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகள், கேரள மா�லம் மறையூருக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.வறட்சி காரணமாக, கடந்த சீசனில், காய்கறி சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து விட்டது. கோடை மழைக்குப்பிறகு, தற்போது காய்கறி சாகுபடி பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.குறிப்பாக, தக்காளி நாற்றுகள், பல ஆயிரம் ஏக்கரில், நடவு செய்யப்பட்டு வருகிறது. இதே போல், கத்தரி உள்ளிட்ட காய்கறி சாகுபடி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தனியார் நாற்றுப்பண்ணைகளில் இருந்து நாற்றுகளை வாங்கி நடவு செய்து, சொட்டு நீர் பாசனம் வாயிலாக நீர் பாய்ச்சுகின்றனர். பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதால், தக்காளி சாகுபடியில், கூடுதல் மகசூல் பெறுகின்றனர்.'தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கும் முன் நடவு பணிகளை முடித்தால், செடிகளின் வளர்ச்சிக்கு மழை ஈரம் உதவியாக இருக்கும்.இந்த சீசனில், உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ