| ADDED : ஆக 09, 2024 10:50 PM
திருப்பூர்:திருப்பூர் மக்களின் கைராசியான மாலா டிரேடர்ஸ், புதிய 'இன்டர்லாக் சர்குலர் நிட்டிங்' இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.நிட்டிங் பிரிவில், நவீன நிட்டிங் இயந்திரங்கள் மிக முக்கியமானது. அந்தவகையில், சீனாவின் 'ராயல் டிரஸ்ட்' இயந்திரங்களை திருப்பூர் தொழில்துறையினருக்கு வழங்கி வருகிறது மாலா டிரேடர்ஸ். கடந்த ஐந்து ஆண்டாக, திருப்பூரின் அதிகப்படியான நிட்டிங் இயந்திரங்களை வழங்கி, உற்பத்தியை ஊக்குவித்துள்ளது. 'நிட்ேஷா' கண்காட்சியில், மாலா டிரேடர்ஸ் நிறுவனம், பருத்தி மற்றும் பாலியஸ்டர் நுால்களை ஒரே நேரத்தில் துணியாக மாற்றும் இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.குறைந்த தேய்மானத்துடன், அதிவேகத்தில் இயங்கும், நீடித்து உழைக்கும் ஊசிகளுடன் கூடிய 'நிட்டிங் மெஷின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வாங்கும் விலையை காட்டிலும், மிகக்குறைந்த விலையில், அதிக தரத்துடன் கூடிய இயந்திரங்களை வழங்கி வருகின்றனர். மாலா டிரேடர்ஸ் நிர்வாகி ராஜேந்திர பிரசாத் கூறுகையில், ''ஒரு நபர் இருந்தால், மூன்று நிட்டிங் இயந்திரங்களை இயக்கும் தன்மையுடன், புதிய இயந்திரங்கள் வந்துள்ளன. அதுமட்டுமல்ல, திருப்பூர் பனியன் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வகை 'பெல்ட்' வகைகளையும், கடந்த ஓராண்டாக வழங்கி வருகிறோம். புதிய இன்டர்லாக் சர்குலர் நிட்டிங் இயந்திரங்கள், 32 கேஜ் தரத்துடன் அறிமுகம் செய்துள்ளோம். விவரங்களுக்கு, 97880 89300 என்ற எண்களில் அணுகலாம்'' என்றார்.