உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் தையல் மெஷின் ஆலை சீன ஜேக் நிறுவனத்துக்கு அழைப்பு

திருப்பூரில் தையல் மெஷின் ஆலை சீன ஜேக் நிறுவனத்துக்கு அழைப்பு

திருப்பூர்:'சீனாவைச் சேர்ந்த 'ஜேக் டெக்னாலஜி' நிறுவனம் திருப்பூரில் தையல் இயந்திர ஆலை துவங்க வேண்டும்' என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.உலகம் முழுதும் உள்ள ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு, சீனாவின் 'ஜேக் டெக்னாலஜி' நிறுவனம், பல்வேறு வகை தொழில்நுட்பங்களுடன் கூடிய தையல் இயந்திரங்களை வழங்கி வருகிறது.இந்நிறுவனத்தின் புதிய 'ஓவர்லாக்' இயந்திர அறிமுக விழா, சீனாவில் நடந்தது. இதில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கப் பிரதிநிதிகள் உட்பட இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்பினர் பங்கேற்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''திருப்பூரில், 3.50 லட்சம் தையல் இயந்திரங்களுடன், 2,000க்கும் அதிகமான ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 'ஜேக் டெக்னாலஜி' நிறுவனத்தின் தொடர் சேவைகள், தடையின்றி கிடைக்க வேண்டும்.''அதற்காக, உற்பத்தி தொழிற்சாலை கிளையை, திருப்பூரில் திறக்க முன்வர வேண்டுமென, சீனாவில் நடந்த விழாவில் அழைப்பு விடுத்தோம். சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, பரிசீலிக்கப்படும் என்றும் அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை