உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அணைப்பகுதியில் அத்துமீறல்: நடவடிக்கை எடுப்பது அவசியம்

அணைப்பகுதியில் அத்துமீறல்: நடவடிக்கை எடுப்பது அவசியம்

உடுமலை:அமராவதி அணை பகுதியில், அத்துமீறும் சுற்றுலா பயணிகளை, கண்காணிக்க, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அமைந்துள்ள அமராவதி அணை, சுற்றுலா தலமாக உள்ளது.பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், சுற்றுலா பயணியர், அணையின் மதகு பகுதிக்கும், நீர் தேக்கத்துக்கும் சென்று, 'செல்பி' எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.பலர் அத்துமீறி, அணை மதகு, கீழ் ஷட்டர், தடுப்பு சுவர் ஆகிய பகுதிகளுக்கு சென்று, 'செல்பி' எடுக்கச்செல்கின்றனர். நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், அணை நீரில் குளிக்கின்றனர்.இத்தகைய விபரீத முயற்சிகளால், உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுப்பணித்துறையினர் அணைப்பகுதியில், கண்காணிப்புக்கு, பணியாளர்கள் நியமித்து, அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ