உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 18 மாதத்தில் முடிக்க வேண்டிய பாலம் பணி 18 ஆண்டாகியும் கிடப்பில் போட்ட அவலம்

18 மாதத்தில் முடிக்க வேண்டிய பாலம் பணி 18 ஆண்டாகியும் கிடப்பில் போட்ட அவலம்

திருப்பூர்;திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம் பகுதியில், ரிங் ரோட்டை இணைக்கும் வகையில் ரயில்வே பாலம் மற்றும் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி கடந்த, 18 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டு, பாதியில் நிற்கிறது. சர்வீஸ் ரோடும் முறையாக இல்லாமல், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.இதற்கு தீர்வு காண வலியுறுத்தி, அணைப்பாளையம் கிளை மா.கம்யூ, சார்பில் நேற்று பாலத்தின் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதர் சங்க கிளை செயலாளர் செல்வி தலைமை வகித்தார். வேலம்பாளையம் நகர மா.கம்யூ., செயலாளர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் நாகராஜன், செல்வகுமார், ரவி உள்ளிட்டோர் பேசினர்.பாலம் பணியை விரைந்து முடிக்க கோரியும், மெத்தனமாக செயல்படும், தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைக் கண்டித்தும், ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷமிட்டனர். பொதுமக்கள் கூறுகையில், ''பணி, 18 மாதங்களில் முடிக்க வேண்டும். 18 ஆண்டாக இது கிடப்பில் போடப்பட்டுள்ளது'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Thavum
ஜூலை 01, 2024 07:01

நீதி மன்றங்கள் தாமாக முன்வரவேண்டும். இதுபோன்ற அலட்சிய அதிகாரிகளை தட்டிகேக்கவேண்டும்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ