உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கம்பன் விழா பேச்சுப் போட்டி:மாணவ, மாணவியர் அசத்தல்

கம்பன் விழா பேச்சுப் போட்டி:மாணவ, மாணவியர் அசத்தல்

திருப்பூர்;கம்பன் விழாவையொட்டி நடந்த பேச்சுப் போட்டியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பேச்சுத் திறமையை வெளிக்காட்டினர்.திருப்பூர் கம்பன் கழகம் சார்பில், வரும், 28ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில், கம்பன் விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பேச்சுப் போட்டி, நேற்று டவுன் ஹால் அருகில் உள்ள லயன்ஸ் கிளப் அரங்கில் நடந்தது.திருப்பூர் கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன், தலைமை வகித்தார். கம்பராமாயணத்தை மையப்படுத்தி, 'ராமனின் வீரம் அல்லது அனுமன் துாது' என்ற தலைப்பில் மாணவ, மாணவியர்க்கும், 'அறம் வெல்லும்-பாவம் தோற்கும்' என்ற தலைப்பில் ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. பேச்சாளர்கள், தங்களின் திறமையை வெளிக்காட்டினர்.மாணவர் பிரிவு நடுவர்களாக விவேகானந்தா வித்யாலயா துணைத் தலைவர் தியாகராஜன், சுதா, விசாலாட்சி ஆகியோரும், ஆசிரியர் பிரிவுக்கான நடுவர்களாக ரகுநாதன், நாராயணசாமி, புலவர் கோவிந்தன் ஆகியோர் செயல்பட்டனர். திருப்பூர் கம்பன் கழக நிர்வாகிகள் சண்முகசுந்தரம், செல்லதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.------------திருப்பூர் கம்பன் கழகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கிடையே பேச்சு போட்டி, லயன்ஸ் கிளப் அரங்கில் நேற்று நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி