உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கருணாநிதி நாணயம் வெளியீடுமத்திய அரசுக்கு தி.மு.க., நன்றி

கருணாநிதி நாணயம் வெளியீடுமத்திய அரசுக்கு தி.மு.க., நன்றி

திருப்பூர்:முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் ெவளியிட்ட மத்திய அரசுக்கு தி.மு.க., நன்றி தெரிவித்துள்ளது.திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. அவைத் தலைவர் நடராஜன், மாநகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ் முன்னிலை வகித்தனர்.செப்., மாதம் சென்னையில் நடைபெறும் கட்சியின் 75 வது ஆண்டு விழாவில் வடக்கு மாவட்டம் சார்பில் திரளாகச் சென்று பங்கேற்பது; மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நினைவாக நாணயம் வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது; அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை