உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கதிரவன் மெட்ரிக் பள்ளியில் மாணவர் மன்ற தேர்தல்

கதிரவன் மெட்ரிக் பள்ளியில் மாணவர் மன்ற தேர்தல்

திருப்பூர்:கே.வி.ஆர்., நகர் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மன்ற தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் நடந்தது. சின்னங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்களிடம் வாக்குகள் கேட்கப்பட்டது. ஆன்லைன் முறையில் நடந்த இத்தேர்தலின் சிறப்பு, தேர்தல் நிறைவடைந்த அடுத்த வினாடியே முடிவைத் தெரிந்து கொள்ள முடியும். பிளஸ் 2 மாணவர்களும், பள்ளியின் கணினி அறிவியல் ஆசிரியரும், இணைந்து இந்த நடைமுறையை உருவாக்கியிருந்தனர். தலைவர் பதவிக்கு 6 பேர், துணைத்தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். பள்ளி தாளாளர் நாராயணமூர்த்தி தேர்தலை துவக்கிவைத்தார். செயலாளர் இந்திராணி நாராயணமூர்த்தி, கதிரவன் கல்வி அறக்கட்டளை உறுப்பினர் நிவேதா உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாணவர் மன்ற தலைவராக கிேஸார்; துணைத்தலைவராக சாதனா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்களை பள்ளி நிர்வாகிகள் மற்றும் முதல்வர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி