உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிட் - ஜோன் கண்காட்சி, ஜூன் 14ல் துவக்கம்!

நிட் - ஜோன் கண்காட்சி, ஜூன் 14ல் துவக்கம்!

திருப்பூர்;'நிட்-ஜோன்' ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சி, முதன்முறையாக திருப்பூரில் நடக்க உள்ளது.'நிட்- ஜோன் டிரேடு எக்ஸ்போ' பரத் கூறியதாவது:திருப்பூரில் முதன்முதலாக, 'நிட்-ஜோன்' என்ற பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி, ஜூன் 14 முதல், 16ம் தேதி வரை, வேலன் ஓட்டல் மான்செஸ்டர் ஹாலில் நடக்கிறது. நிட்டிங், பிரின்டிங் மற்றும் தையல் இயந்திரங்கள் கண்காட்சியில் இடம்பெறும்.சீனாவில் உற்பத்தியாகும் பேப்ரிக் ரகங்களும், கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படுகின்றன. பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான இயந்திரம், அசசரீஸ், பேப்ரிக் ரகங்கள், நுாலிழைகள் கண்காட்சியில் இடம்பெறும்.தென்னிந்திய அளவில், 10 நாடுகளின் வர்த்தகர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில், 250 ஸ்டால்கள் அமைக்கப்படும். சீனா, ஜெர்மனி, ஜப்பான், தைவான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் வினியோகஸ்தர் பங்கேற்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார். ஆர்.டி.எஸ்., டிஜிட்டல் பிரின்டிங் நிறுவனம், ஸ்ரீகனகதுர்கா டெக்ஸ்டைல் நிறுவன பிரதிநிதிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை