உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குமுதா பள்ளி மாணவர் நீட் தேர்வில் அசத்தல்

குமுதா பள்ளி மாணவர் நீட் தேர்வில் அசத்தல்

திருப்பூர்:குமுதா பள்ளியில் படித்த மாணவர், நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே நல்ல மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.மாணவர் நவீன், பிளஸ் 2 பொதுதேர்வில், 590 மதிப்பெண், ஜெ.இ.இ., மெயின்ஸ் தேர்வில், 94 சதவீதம் பெற்று, அட்வான்ஸ்டு தேர்வு முடிவு களுக்காக காத்துள்ளார். இவர் பல்வேறு திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்று, கல்வி ஊக்கத் தொகையாக, 3 லட்சத்து, 31 ஆயிரம் பெற்றுள்ளார்.தற்போது நடந்த 'நீட்' தேர்வில் முதல் முயற்சிலேயே, 659 மதிப்பெண் பெற்றார். மாணவி பீனா கிரஸ், 592 பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். 'நீட்' தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குநர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை