உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சட்ட விழிப்புணர்வு வாகனம் துவக்கம்

சட்ட விழிப்புணர்வு வாகனம் துவக்கம்

பல்லடம்;பல்லடம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு மொபைல் வேன் வாயிலாக ஏற்படுத்தப்படுகிறது. இதன் துவக்க விழா, நேற்று பல்லடத்தில் நடந்தது.விழாவுக்கு சார்பு நீதிபதி சிவா தலைமை வகித்தார். ஜே.எம்., கோர்ட் மாஜிஸ்திரேட் சித்ரா முன்னிலை வகித்தார்.கிராமங்கள் தோறும் மொபைல் வாகனம் மூலம் பொது மக்களுக்கு சட்டவிழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கறிஞர் சங்க தலைவர் ரவீந்திரன், செயலாளர் பொன்னுசாமி உட்பட வழக்கறிஞர்கள் மற்றும் கோர்ட் அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை