உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கள்ளச்சாராயம் ஒழியட்டும் கள்ளுக்கு தடை நீங்கட்டும்

கள்ளச்சாராயம் ஒழியட்டும் கள்ளுக்கு தடை நீங்கட்டும்

அவிநாசி:கள்ளச்சாராயத்திலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவும், கள்ளுக்கு உண்டான தடையை நீக்க வலியுறுத்தியும், அவிநாசியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கள்ளக்குறிச்சியில், விஷச்சாராயம் அருந்தி, 65 பேர் உயிரிழந்தனர். இது விஷயத்தில், மெத்தனமாக செயல்பட்ட தமிழக அரசை கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி, அவிநாசி அத்திக்கடவு போராட்ட குழு, களஞ்சியம் விவசாயிகள் சங்கம், கிராமிய மக்கள் இயக்கம் ஆகியன சார்பில், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். களஞ்சியம் விவசாயிகள் சங்க தலைவர் சுப்ரமணியம், கிராமிய மக்கள் இயக்க தலைவர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஒன்றிய தலைவர் வேலுசாமி, ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட தலைவர் மாணிக்கராஜ் உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், கள்ளச்சாராயத்தின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும், கள்ளுக்கான தடையை விலக்க வேண்டும் ஆகிய குறித்து கோஷம் எழுப்பினர். ----அவிநாசியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட விவசாயிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி