உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாம்பழங்களை பார்த்து வாங்குங்க...

மாம்பழங்களை பார்த்து வாங்குங்க...

திருப்பூர்:திருப்பூரில், ரசாயனங்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட, 1.2 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றினர்.திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர், மூன்று பிரிவுகளாக நேற்று மாம்பழம் விற்பனை குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.எஸ்.சி., பள்ளி ரோடு, தினசரி மார்க்கெட், வெள்ளியங்காடு பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.மூன்று குடோன்களிலிருந்து, ரசாயனங்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1.2 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட மாம்பழங்கள், மாநகராட்சி வாகனத்தில் ஏற்றப்பட்டு, குப்பையில் கொட்டப்பட்டன.உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:திருப்பூரில் ரசாயனங்களை பயன்படுத்தி, மாம்பழங்களை செயற்கையாக பழுக்கவைத்த மூன்று விற்பனை நிறுவனங்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டது. மாம்பழம் மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.வியாபாரிகள், கால்சியம் கார்பைடு, அசிட்டலின் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்க கூடாது. ரசாயனங்களை கொண்டு செயற்கை முறையில் பழுக்கவைத்த மாம்பழங்களை சாப்பிட்டால், தோல் அலர்ஜி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும். தொடர் ஆய்வுகள் நடத்தி, ரசாயனங்களை பயன்படுத்தி செயற்கையாக மாம்பழங்களை பழுக்கவைக்கும் விற்பனை நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை