உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காதல் விவகாரம்: வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை; 8 பேருக்கு வலை

காதல் விவகாரம்: வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை; 8 பேருக்கு வலை

திருப்பூர்:திருப்பூரில், வாலிபரின் தவறான பழக்கத்தால் ஏற்பட்ட பிரச்னையில், அவரை விரட்டி சென்று கொலை செய்த, எட்டு பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் அன்பு, 23. திருப்பூர் அருகே கணக்கம்பாளையத்தில் தங்கி, வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். திருப்பூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்து வரும், 14 வயது சிறுமியிடம் பழகி, அடிக்கடி மொபைல் போனில் வீடியோ கால் பேசி வந்தார்.சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, ஆபாசமாக சில வீடியோ, போட்டோக்களை சிறுமிக்கு தெரியாமல் எடுத்தார். இது, பெற்றோருக்கு தெரிய வந்து, சிறுமியை கண்டித்தனர். இதனால், அன்புவிடம் பேசுவதை சிறுமி தவிர்த்தார்.இதற்கிடையில், அன்புவின் நண்பரான தமிழரசன், 24, என்பவரிடம், சிறுமி பழகி வந்தார். சிறுமியும் இவரும் காதலித்து வருவது குறித்து அன்புவிடம் தெரிவித்தார். அப்போது அன்பு, முன்னதாக தானும் சிறுமியும் காதலித்துள்ளோம் என்று கூறி அதற்கான வீடியோ ஆதாரத்தைக் காட்டியுள்ளார்.அதனை வாங்கிய தமிழரசன், அவற்றை சிறுமியின் தந்தைக்கு அனுப்பி, அவரை மிரட்டி, அவரிடம் இருந்து, 10,000 ரூபாயை பெற்றார். இது குறித்து, அன்புக்கு தெரிய வந்ததில், அன்புக்கும் தமிழரசனுக்கும் தகராறு ஏற்பட்டது.பிரச்னை தொடர்வதை விரும்பாத சிறுமியின் தந்தை அன்புவால் தான் இவ்வளவு பிரச்னை ஏற்பட்டது என எண்ணி, அவரிடம் இருக்கும் வீடியோ, போட்டோவை வாங்க முடிவு செய்தார். இதற்காக, அதே பகுதியை சேர்ந்த அன்புவுக்கு பழக்கமான செல்லத்துரையிடம் தெரிவித்தார். கொடூர கொலைநேற்று முன்தினம் இரவு காந்தி நகர் ஏ.வி.பி., லே அவுட் பகுதிக்கு வருமாறு அன்புவுக்கு தொடர்பு கொண்டு செல்லதுரை பேசினார். நம்பிய அன்பு, தன் தம்பி மகேஸ்வரன், 20, என்பவரை அழைத்துக் கொண்டு காரில் சென்றார்.அப்பகுதியில், முன்கூட்டியே காத்திருந்த செல்லதுரையின் நண்பர்களான சூர்யா, தேவா, பிரசன்னா, தமிழரசன் ஆகியோர், அன்புவை அரிவாளால் தாக்க வந்தபோது, அவர் ஓட ஆரம்பித்தார். இருப்பினும், துரத்தி வந்த கும்பல் சரமாரி வெட்டி அன்புவை கொடூரமாக கொலை செய்தது.முன்னதாக ஆயுதங்களுடன் விரட்டி சென்ற கும்பலை பார்த்த மகேஸ்வரன், அனுப்பர்பாளையம் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார். போலீசார், அங்கு சென்று பார்த்ததில், அன்பு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.அனுப்பர்பாளையம் போலீசார் கூறுகையில், 'அன்பு என்பவர் கொலையில், தமிழரசன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள செல்லதுரை உட்பட எட்டு பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறோம். சிறுமியின் தந்தையிடம் விசாரித்து வருகிறோம். தலைமறைவாக உள்ள செல்லத்துரை உள்ளிட்ட சிலர் மீது கஞ்சா, அடிதடி போன்ற வழக்கு உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்