உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையை கண்டித்தும், போரை நிறுத்த வலியுறுத்தியும், திருப்பூர் மாவட்ட மா.கம்யூ., சார்பில் மாநகராட்சி சந்திப்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு நகர செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், செயற்குழு உறுப்பினர் உண்ணிகிருஷ்ணன், சகீலா உள்ளிட்டோர் பேசினர். இதில் கலந்து கொண்ட கட்சியினர் இஸ்ரேலைக் கண்டித்து கோஷமிட்டனர். போர் தாக்குதலின் போது பலியானோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி