உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீராம பஜனை மடத்தில் மகா பெரியவா ஜெயந்தி

ஸ்ரீராம பஜனை மடத்தில் மகா பெரியவா ஜெயந்தி

திருப்பூர் : ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஆச்சார்யார், ஸ்ரீ மகா பெரியவாவின் 131வது ஜெயந்தி விழா, திருப்பூர் ஓடக்காடு ஸ்ரீ ராம பஜனை மடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.இதையொட்டி நேற்று காலை தோடய மங்களம், குரு கீர்த்தனை மற்றும் அஷ்டபதி ஆகியன நடந்தன. தொடர்ந்து தீபாராதனையும் அஷ்டபதி தொடர்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு பஜனையும், நாம கீர்த்தனையும் மேற்கொண்டனர்.இன்று (26ம் தேதி) 9வது ஆண்டு சீதா கல்யாண மஹோத்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8:00 மணிக்கு உஞ்சவ்ருத்தி, 9:00 மணிக்கு வஸந்த மாதவ பூஜை, பஜனை மற்றும் கொட்னோத்ஸவம் ஆகியனவும், பிற்பகல் 12:30 மணிக்கு சீதா கல்யாண மகோத்சவம் நடக்கிறது.தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு வஸந்தோத்சவம், தீபாராதனை, பிரதிஷ்னை, திவ்ய நாம பஜனை, ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவம் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ