உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிரம்பியது மலம்புழா அணை 4 மதகுகளில் உபரி நீர் திறப்பு

நிரம்பியது மலம்புழா அணை 4 மதகுகளில் உபரி நீர் திறப்பு

பாலக்காடு:நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், மலம்புழா அணை முழு கொள்ளளவை எட்டியது. அணையிலிருந்து 4 மதகுகளில் உபரி நீர் திறந்து விடப்பட்டது.கேரளா மாநிலத்தின் முக்கிய அணைகளில் ஒன்று மலம்புழா. 377 அடி உயரமுள்ள இந்த அணை பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில், சமீபத்தில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, தற்போது, 370 அடியை எட்டி உள்ளது.இதையடுத்து, அணையின் பாதுகாப்பு மற்றும் வெள்ள பாதிப்பு தவிர்ப்பதன் ஒரு பகுதியாக, விதிமுறை படி நேற்று காலை அணை திறந்து விடப்பட்டது. அணையின் 4 மதுகுகள் வழியாக, 3 செ.மீ., வீதம் உபரி நீர் திறக்கப்பட்டது. மலம்புழா பூங்காவை சுற்றி பார்க்க வந்த ஆயிரக்கணக்கானோர், இதை ரசித்து, மொபைல் போனில் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். மூகைப்புழை, கல்பாத்திப்புழை, பாரதப்புழை ஆகிய ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று, மலம்புழா நீர்ப்பாசன பிரிவு நிர்வாக பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை