உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.10 லட்சம், 20 சவரன் திருடியவர் கைது

ரூ.10 லட்சம், 20 சவரன் திருடியவர் கைது

அவிநாசி:அவிநாசியில், கட்டுமான நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய், 20 பவுன் நகை ஆகியன திருடப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை மீட்டனர்.அவிநாசி, கைகாட்டிபுதுாரில் வாசுதேவன் என்பவரின் கட்டுமான நிறுவன அலுவலகம் உள்ளது. கடந்த 23 ம் தேதி வழக்கம் போல் அலுவலகப் பணிகள் முடிந்து அவர் பூட்டி விட்டுச் சென்றார்.அன்றிரவு அந்த அலுவலக பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த 10 லட்சம் ரூபாய், 20 பவுன் நகை, மொபைல் போன் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றார்.இந்த திருட்டு குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து இது குறித்து விசாரணை நடந்தது.தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் ெகாண்டு விசாரித்தனர். இதில், ஈடுபட்ட சின்னசேலத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம், 28 என்பவர் பிடிபட்டார்.அவர் திருடிச் சென்ற பொருட்கள் மீட்கப்பட்டது. விசாரணைக்குப் பின் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை