| ADDED : ஜூன் 16, 2024 12:39 AM
திருப்பூர்;வட மாநில பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க செவ்வாய் தோறும் மங்களூரு - பாட்னா வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.வரும், 18, 25, ஜூலை, 2 ஆகிய தேதிகளில் இரவு, 8:00 மணிக்கு மங்களூருவில் புறப்படும் இந்த சிறப்பு ரயில் (எண்: 03244) வெள்ளி காலை, 5:30 மணிக்கு பீஹார் தலைநகர், பாட்னா சென்று சேரும்.புதன் அதிகாலை, 4:55 மணிக்கு திருப்பூர் வரும். மறுமார்க்கமாக பாட்னாவில் இருந்து சனிக்கிழமை தோறும் (ஜூன், 15, 22, 29) சிறப்பு ரயில் (எண்: 03243) இயக்கப்படும். சனிக்கிழமை இரவு, 10:30 மணிக்கு புறப்படும் ரயில் செவ்வாய்க்கிழமை காலை, 7:00 மணிக்கு மங்களூரு சென்றடையும். திங்கள் இரவு, 9:10 மணிக்கு திருப்பூர் வரும்.முதல் வகுப்பு ஏ.சி., ஒன்று, இரண்டாம் வகுப்பு ஏ.சி., ஆறு பெட்டி, படுக்கை வசதி ஆறு, மூன்று பொது பெட்டி உள்ளிட்ட, 21 பெட்டிகளை கொண்டதாக சிறப்பு ரயில் இருக்கும்.''இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது'' என, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.