உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாங்காய் பறிக்கும் தொழிலாளி பலி: உறவினர்கள் போராட்டம்

மாங்காய் பறிக்கும் தொழிலாளி பலி: உறவினர்கள் போராட்டம்

உடுமலை:மடத்துக்குளம் அருகே மரத்தில் ஏறி மாங்காய் பறித்த தொழிலாளி, கொக்கி வயிற்றில் குத்தியதில் மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மடத்துக்குளம்,குமரலிங்கத்தை சேர்ந்த குமரசேன், 30, மாங்காய் பறிக்கும் தொழிலாளி. நேற்று காலை, அதே பகுதியை சேர்ந்த மாங்காய் வியாபாரி மாணிக்கம் அழைத்ததின் பேரில், கல்லாபுரம், இடைக்காடு தேவராஜூக்கு சொந்தமான மாந்தோப்பிற்கு, மாங்காய் பறிக்க சென்றுள்ளார்.மாமரத்தில் ஏறி, மாங்காய் பறித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக, கொக்கி வயிற்றில் குத்தி, மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் மீட்டு, குமரலிங்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.மேல் சிகிச்சைக்காக, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வழியிலேயே இறந்தார்.இந்நிலையில், வேலைக்கு அழைத்து சென்றவர், உரிய பாதுகாப்பு இல்லாமலும், கீழே விழுந்த நிலையில் உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாததாலும், பலியாகியுள்ளார்.எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; சடலத்தை வாங்க மாட்டோம் என, இறந்த குமரேசனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் உரிய விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும், என உறுதியளித்ததால், கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை