உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இறைச்சிக்கழிவால் நாய்த்தொல்லை

இறைச்சிக்கழிவால் நாய்த்தொல்லை

திருப்பூர் : பாரதிய மஸ்துார் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் மாதவன், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:சாய ஆலைகள், சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை நீர் நிலைகளில் திறந்து விடுவதை தடுக்க வேண்டும். கணியாம்பூண்டி உள்பட பல்வேறு இடங்களில், இறைச்சிக்கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. தெருநாய் தொல்லை அதிகரிப்பதோடு, பொதுமக்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகிறது.பல்லடத்தில் செயல்பட்டுவரும் கோழிப்பண்ணைகளிலிருந்து, செத்த கோழிகளை பி.ஏ.பி., வாய்க்காலில் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதியான, அதிக புகை உமிழும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை கண்டறிந்து, பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை