உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கனிம வளங்கள் கடத்தல்

கனிம வளங்கள் கடத்தல்

பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை, முதல்வருக்கு அனுப்பிய மனு: பல்லடம் வட்டாரத்தில் உள்ள நீர் நிலைகளில், வண்டல் மண் எடுப்பதாக கூறி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை சுரண்டி எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். சமீபத்தில், அனுப்பட்டி கிராமத்தில், நுாற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள், ராட்சத இயந்திரங்களைப் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான லோடு கிராவல் மண் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பெயரில், முறைகேடாக அனுமதி பெற்று, நீர்நிலைகளில் கிராவல் மண் கடத்தி விற்பனை செய்யப்படுகிறது. சிறப்பு முகாம் நடத்தி, விவசாயிகளிடமிருந்து விண்ணப்பம் பெற்று, அதன் அடிப்படையில், ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும். மண் கடத்தலில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !