உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

அவிநாசி:அவிநாசி, ஆட்டையாம்பாளையம், காசி கவுண்டம்புதுார், மடத்துப்பாளையம் ரோடு, கைகாட்டிப்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ஒரு மணி நேரம் மழை நீடித்ததால் இரவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல் அவிநாசி பகுதியில் ஓரளவு மழை பெய்ய துவங்கியுள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.n பொங்கலுாரில் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் நேற்று நல்ல மழை பெய்தது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது பல அடி உயரத்துக்கு உயர்த்தப்பட்டது. இதனால், கடைகள் வர்த்தக நிறுவனங்கள் ரோட்டை விட தாழ்வாக அமைந்தது. பழைய கட்டடங்களை இடித்து புதிதாக கட்டியவர்கள் இந்த மழை வெள்ளத்தில் தப்பித்தனர். பழைய கட்டடங்களுக்குள் மழை நீர் புகுந்தது. விளம்பரப் பலகைகள் காற்றில் துாக்கி வீசப்பட்டன. சரியான வடிகால் இல்லாததால் ரோட்டில் இடுப்பளவு நீர் தேங்கி நின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை