குழந்தைகளின் மனதை ஈர்த்திருக்கிறதா 'குரங்குப் பெடல்'?இது, கடந்த, 1980-களின் கதை. அப்போதெல்லாம் 'மொபைல் போன்' கிடையாது; தற்போது 'மொபைல் போன்'கள் தான் வாழ்க்கை என்றாகிவிட்ட நிலையில், இந்த படம் எந்தளவு குழந்தைகளை ஈர்க்கும் என்ற சந்தேகம், துவக்கத்தில் இருந்தது. ஆனால், இப்படத்தை குழந்தைகள் உள் வாங்கி உள்ளனர். இது, தங்களுக்கான படம் என்பதை உணர்ந்து, விரும்பி பார்க்கின்றனர்.குழந்தைகளுக்கான சினிமா எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?கல்லுரியில் படிக்கும் போதே, நண்பர்களுடன் இணைந்து, 'பிலிம் சொசைட்டி' நடத்தி வந்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. பெரியவர்கள் பார்க்கும் சினிமாவை சிறியவர்களிடமும் திணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். குழந்தைகளுக்கான சினிமாவை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியின் விளைவாக உருவானதே 'குரங்கு பெடல்'.விஷூவல் கம்யூனிகேஷன் மாணவர்கள், சினிமாவில் சாதிக்க வேண்டும் என விரும்புகின்றனரே?உண்மை தான். அப்படி நினைத்து தான் நானும் அந்த படிப்பை தேர்வு செய்தேன். ஆனால், அந்த படிப்பு 'கார்ப்பரேட் கம்யூனிகேஷனு'க்கானது. சினிமா துறையில் சாதிக்க விரும்புவோர், 'பிலிம் இன்ஸ்டிடியூட்டில்' சேர்ந்து படிப்பதே நல்லது.குழந்தை நட்சத்திரங்களை தேர்வு செய்தது ஏன்...கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தைகள் ஒருமித்த மனநிலையுடன், கருத்து முரண்பாடுகளுக்கு உட்படாதவர்களாக இருக்க வேண்டும்; அதே நேரம், திடமான உடல்தகுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநிலம் முழுக்க தேர்வு நடத்தினோம். ஈரோட்டில், சிறுவர், சிறுமியர்க்கு சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை கற்றுத்தரும் 'கலைத்தாய்' அறக்கட்டளையில் பயின்றுக் கொண்டிருந்த சிறுவர்கள் கதாபாத்திரத்துக்கு உகந்தவர்களாக இருந்ததால் அவர்களை தேர்வு செய்தோம்.மாறுபட்ட கதைக்களம் கொண்ட சினிமாக்களுக்கு அரசு சலுகை அவசியமா?இளைய தலைமுறையினர் தங்கள் வயதுக்கேற்ற நிகழ்ச்சிகளை 'யூடியூப்' வாயிலாக பார்த்து, ரசிக்க துவங்கி விட்டனர்; அவர்கள் சினிமா தியேட்டருக்கு சென்று, சினிமா பார்ப்பது குறைந்துவிட்டது. அடுத்த தலைமுறையினர் சினிமா தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்க வேண்டும்; அப்போது தான், சினிமா தொழில் வளரும். இதுபோன்ற சினிமாக்களுக்கு, அரசு வரிச்சலுகை வழங்க வேண்டும்.தங்களின் சினிமா பயணம் குறித்து...முதல் படம் 'மதுபானக்கடை', இரண்டாவது படம் 'வட்டம்' மூன்றாவது படம் தான் 'குரங்கு பெடல்'. மாறுபட்ட சிந்தனையுடன் கதை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்படும் சினிமாக்கள், அதுபோன்ற கருத்து தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. அடுத்து, ஆக்ஷன் சினிமா எடுக்க கதையை தயார் செய்து வருகிறேன்.