உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கான இசைப்போட்டி

மாணவர்களுக்கான இசைப்போட்டி

உடுமலை, : உடுமலை தமிழிசை சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான இசைப்போட்டி நடந்தது.உடுமலை ஜி.வி.ஜி., கலையரங்கில் நடந்த இப்போட்டியில், தமிழிசை சங்க துணைத்தலைவர் மணி வரவேற்றார். குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஞானசேகர், மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்துவது குறித்து பேசினார்.சங்கச்செயலாளர் சண்முகசுந்தரம், போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்படுவது குறித்து பேசினார்.உடுமலை சுற்றுப்பகுதியிலிருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.தமிழிசை சங்கத்தின் சார்பில், அடுத்து கண்ணதாசன் பாடல்களின் சிறப்புகள் குறித்து, செப்., 11ல் நடக்கும் நிகழ்வில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கண்ணபிரான் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி