திருப்பூர்;'நிப்ட்-டீ' கல்லுாரி, படிக்கும் மாணவ, மாணவியருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில், இந்தியாவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.பனியன் தொழில் குறித்த முழுமையான கல்வியறிவு மற்றும் அனுபவ அறிவு வழங்க வேண்டும் என்கிற நோக்கில், திருப்பூர் முதலிபாளையத்தில் 'நிப்ட்-டீ' கல்லுாரி துவக்கப்பட்டது. பின்னலாடை குறித்த முழுமையான அறிவும், வடிவமைப்பு, வர்த்தகம், மேலாண்மை மற்றும் சந்தைபடுத்துதல் ஆகியன குறித்தும் கற்பிக்கப்படுகிறது.இந்தியாவில், மிகவும் வளர்ச்சியடைந்த துறைகளில் ஒன்றாக 'பேஷன் டிசைனிங்' துறை உள்ளது. ஆடை அலங்காரங்கள் புதிய மாற்றம் பெறுகின்றன. கற்பனைத் திறனும், படைப்பாற்றலும் உள்ளவர்களுக்கு, 'பேஷன் டிசைனிங்' மிகவும் ஏற்றது. தேசிய அளவில் 2வது இடம்
'நிப்ட்-டீ' கல்லூரி, வேலை வாய்ப்பு வழங்குவதில், இந்தியாவில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது. பாரதியார் பல்கலையுடன் இணைந்து, பாடப்பிரிவுகளை வழங்கி வருகிறது.இளங்கலை பிரிவில், பி.எஸ்.சி., 'அப்பேரல் பேஷன் டிசைனிங்', 'காஸ்டியூம் டிசைனிங் அண்ட் பேஷன்', 'பேஷன் அப்பேரல் மேனேஜ்மென்ட்', 'அப்பேரல் மேனுபாக்சரிங் அண்ட் மெர்ச்சன்டைசிங்', 'அப்பேரல் புரெடக்,ஷன் டெக்னா லஜி', கம்ப்யூட்டர் சயின்ஸ்; பி.பி.ஏ., (ஐ.பி.,) மற்றும் பி.காம்., (பி.ஏ.,), பி.காம்., (சி.ஏ.,) படிப்புகளும், முதுகலையில், எம்.எஸ்.சி., அப்பேரல் பேஷன் டிசைனிங் படிப்பும், முதுகலை பட்டயப்படிப்பில், 'டிப்ளமோ இன் அப்பேரல் மெர்ச்சன்டைசிங் அண்ட் மேனேஜ்மென்ட்' படிப்புகள் உள்ளன.மேலாண்மை மற்றும் வணிகவியல் துறையில் ஆராய்ச்சி படிப்புகளும் (பி.எச்.டி) தொடங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல், பி.எஸ்.சி., (சி.எஸ்.,) - ஏ.ஐ., தொழில்நுட்பம் மற்றும் 'டேட்டா சயின்ஸ்' பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களுக்கும் பேருந்து வசதிகள் ஏற்படுத்தியுள்ளது. கல்லுாரி வளாகத்திலேயே இருபாலருக்கான தங்கும் விடுதி, உணவுக்கூடம் உள்ளது.மூன்றாமாண்டு பயிலும் மாணவர்கள் படிக்கும்போதே பகுதி நேர வேலைவாய்ப்பினைப் பெற்று அதன் மூலம் வருமானம் ஈட்டுவதோடு, அனுபவ அறிவு, தொழில் துறையினரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பினை பெறுகின்றனர்.கல்லுாரி வளாக நேர்காணலில் கலந்துகொண்டு. கல்லுாரியில், மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது; மேலும் விவரங்களுக்கு, 80569 31111, 80563 98111, 0421 2374200, 2374452 என்ற எண்களிலும்,nifttea.ac.in, www.nifttea.ac.inஎன்ற இணையதள முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் என, கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.