உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வித்யாசாகர் பள்ளியில் நீட் தேர்வு

வித்யாசாகர் பள்ளியில் நீட் தேர்வு

திருப்பூர்:திருப்பூர் கூலிபாளையம் வித்யாசாகர் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் 'நீட்' தேர்வு மையமாக செயல்பட்டது. நேற்று 720 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். காலை 11:00 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலன் கருதி பள்ளியின் சார்பாக கழிப்பிட வசதிகளும், அடையாள அட்டை பதிவிறக்கம், புகைப்படங்கள் எடுப்பதற்கும் ஆங்காங்கே தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு சரியான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, செயலாளர் சிவப்ரியா மாதேசுவரன்,முதல்வர் சசிரேகா பாலசுப்பிரமணியன் ஆகியோர் மேற்பார்வை செய்து அறிவுரைகள் வழங்கினர். நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.மேலும் மாணவர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கெட் போன்ற சிற்றுண்டி உணவுகளும், மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை