உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலீஸ் சார்பில் நீர்மோர் பந்தல்

போலீஸ் சார்பில் நீர்மோர் பந்தல்

திருப்பூர்:வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன் சார்பில், நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெப்பத்தால், சிரமப்பட்டு வரும் மக்களை பாதுகாக்கும் வகையில், பல இடங்களில் தன்னார்வ அமைப்பு உள்ளிட்டோர் நீர்மோர் பந்தல் அமைத்து வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன் சார்பில், பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தல் ஸ்டேஷன் அருகே திறக்கப்பட்டது. நல்லுார் உதவி கமிஷனர் நந்தினி திறந்து வைத்தார்.வீரபாண்டி இன்ஸ்பெக்டர் விநாயகம், தெற்கு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ