உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாலிபர் காதை கடித்து துப்பியவருக்கு வலை

வாலிபர் காதை கடித்து துப்பியவருக்கு வலை

திருப்பூர்: திருப்பூரில், மனைவியிடம் பேசிய வாலிபரின் காதை கடித்து துப்பிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர் போயம்பாளையம், அவிநாசி நகர், 5வது வீதியை சேர்ந்தவர் சுரேஷ், 29; தொழிலாளி. இவரது மனைவியுடன், அதே பகுதியை சேர்ந்த வினோத், 26 என்பவர் சமீபத்தில் பேசினார். இதை பார்த்த சுரேஷ், சில நாள் முன், வாலிபருடன் தகராறு செய்து, அவரை தாக்கினார்.கடந்த, 2ம் தேதி இரவு மீண்டும் அப்பகுதிக்கு வினோத் வந்தார். உடனே மனைவியுடன் பேச வருவதாக நினைத்து தகராறு செய்ய சென்றார். ஆத்திரமடைந்த வினோத், கட்டை எடுத்து சென்று அவரை தாக்க சென்றார். இருவருக்குமிடையே தகராறு முற்றியதில், ஒருவருக்கொருவர், ரோட்டில் உருண்டு, சண்டை போட்டனர்.ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த சுரேஷ், வினோத்தின் வலது காதின் மேல் பகுதியை கடித்து துப்பினார். அதில், காதில் மேற்பகுதி சதை மட்டும் பிய்ந்து வந்து விட்டது. காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வாலிபரின் காதை கடித்து துப்பிய கணவர் சுரேஷை அனுப்பர்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை