உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நல்லுார் ஈஸ்வரன் கோவிலுக்கு புதிய அறங்காவலர்கள் நியமனம்

நல்லுார் ஈஸ்வரன் கோவிலுக்கு புதிய அறங்காவலர்கள் நியமனம்

திருப்பூர்;நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு, இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கோவிலுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை, ஹிந்து சமய அறநிலையத்துறை நியமித்துள்ளது. பட்டியல் சார்ந்த கோவில் என்பதால், ஐந்து நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிவகுமார், ஜெகதீஷ், பிரியா, முருகேசன், அன்னபூரணி ஆகிய ஐந்து பேர், அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், விரைவில் கோவில் அலுவலகத்தில் பொறுப்பேற்பர்; அன்றைய தினமே, தேர்தல் நடத்தி, இவர்களில் ஒருவர், தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். புதிய அறங்காவலர் குழு, பதவியேற்ற நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ