உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிட் ஷோ கண்காட்சி நிறைவு ரூ.250 கோடி வர்த்தக விசாரணை 

நிட் ஷோ கண்காட்சி நிறைவு ரூ.250 கோடி வர்த்தக விசாரணை 

திருப்பூர்:அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்த மூன்று நாள் 'நிட் ஷோ' - 2024' கண்காட்சியை, 27 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்; 250 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக விசாரணை நடந்துள்ளது.பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் 'நிட் ஷோ' கண்காட்சி, கடந்த, 25 ஆண்டுகளாக திருப்பூரில் நடைபெற்று வருகிறது; அதன்படி, 22வது கண்காட்சி, காங்கயம் ரோடு 'டாப் லைட்' மைதானத்தில், 9ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடந்தது.'நிட்டிங்', பிரின்டிங், டிஜிட்டல் சூயிங், கட்டிங், எம்ப்ராய்டரி இயந்திரங்கள்; பிரின்டிங் சாயம், கெமிக்கல், ஆயத்த ஆடை உற்பத்திக்கான 'அசசரீஸ்'; இயந்திர உதிரி பாகங்கள், சோலார், கம்ப்யூட்டர் சாப்ட்வேர், சர்வீஸ் சென்டர்கள் என, 400 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அலைமோதல்

துவக்க விழாவில் பங்கேற்ற தொழில் அமைப்பினர், தங்கள் உறுப்பினர்கள் கட்டாயம் கண்காட்சியை பார்த்து பயன்பெற வேண்டுமென, சுற்றறிக்கை அனுப்பினர்.பின்னலாடை தொழில்துறையினர், தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ, மாணவியர், நேரில் பார்வையிட்டனர். திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர், தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான புதுவகை மெஷின்கள் குறித்தும் வர்த்தக விசாரணை நடத்தியுள்ளனர். நிறைவு நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை முதல் கூட்டம் அலைமோத துவங்கியது.ஐந்து அரங்குகளில் உள்ள, 1.50 லட்சம் சதுரடி பரப்பில் அமைக்கப்பட்ட, பெரும்பாலான ஸ்டால்களை பார்த்துவிட்டு ஒருவர் வெளியேற மூன்று மணி நேரமானது.

திருப்புமுனை

'நிட்ேஷா' கண்காட்சி அமைப்பாளர் கிருஷ்ணா கூறியதாவது:திருப்பூரில் இதுவரை நடத்திய கண்காட்சிகளில் இல்லாத அளவுக்கு, 22வது கண்காட்சியை அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர், பார்த்துள்ளனர். வர்த்தக விசாரணையும் நடத்தியுள்ளனர்.அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரான புதுவகை மெஷின்கள் அணிவகுத்திருந்ததால், நேரில் இயக்கி பார்த்து, சந்தேகங்களை தீர்த்துக்கொண்டனர்.'மேக் இன் இந்தியா' இயந்திரங்கள், வெளிநாட்டு இயந்திரங்களுக்கு போட்டியாக, வர்த்தக விசாரணை நடத்தியுள்ளன. கடந்த மூன்று நாட்களில், 27 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்; 250 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக விசாரணை நடந்துள்ளது.பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பியுள்ள சரியான நேரத்தில் நடந்த 'நிட்ேஷா' கண்காட்சியால், திருப்பூர் பின்னலாடை தொழிலில் மாபெரும் திருப்புமுனையாக அமையும் என, தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை