உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சொம்பு பாத்திரங்களுக்கு குறையாத மவுசு

சொம்பு பாத்திரங்களுக்கு குறையாத மவுசு

திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், காளம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 250 பாத்திர உற்பத்திப் பட்டறைகள் உள்ளன.இங்கு, எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் குடம், பானை, பொங்கல் பானை, தட்டு, டேக் ஷா, இட்லி சட்டி, ஆலய மணி, உள்ளிட்ட பல்வேறு பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சொம்பு பாத்திர உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. சொம்பு பாத்திர உற்பத்தியில் பத்துக்கும் மேற்பட்ட பட்டறைகள் ஈடுபட்டு வருகின்றன.

பலவகை சொம்புபாத்திரங்கள்

பட்டறைதாரர்கள் தாங்கள் ஆர்டர் பெறும் உலோகத்தில் தகடு வாங்கி, இயந்திரத்தின் மூலம் அவற்றின் வகை, லிட்டர் கொள்ளளவு ஆகிய வற்றின் அடிப்படையில் சொம்பு பாத்திரத்தை உற்பத்தி செய்கின்றனர்.உற்பத்தி செய்யப்பட்ட சொம்பு பாத்திரம் பாலீஷ் செய்யப்பட்டு, பேக்கிங் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.இங்கு, எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில், சொம்பு, லோட்டா சொம்பு, மோர் சொம்பு, அய்யங்கார் சொம்பு ஆகிய நான்கு வகை சொம்பு பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

2 லிட்டர் கொள்ளளவு வரை சொம்பு

ஒவ்வொரு சொம்பும் 250 மி.லி., முதல், 500, 750 மி.லி., ஒரு லிட்டர், ஒன்றேகால், ஒன்றரை, இரண்டு லிட்டர் வரை கொள்ளளவு கொண்டதாக இருக்கும். இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட சொம்பு பாத்திரம் கோவில்களில் தீர்த்தம் வழங்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது.இங்கு உற்பத்தி செய்யப்படும் சொம்பு பாத்திரம் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.சொம்பு பாத்திரங்களுக்கு என்றும் மவுசு குறைவதில்லை.நான் இந்த தொழிலில், 40 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். குறிப்பிட்ட நேரத்தில் ஆர்டர் வழங்குதல், தரமான உற்பத்தி ஆகியவற்றால் விற்பனையாளர்கள் இங்கு ஆர்டர் கொடுக்க விரும்புகின்றனர். பாத்திரங்களுக்கு எத்தனை மாற்று பொருள் வந்தாலும் உலோகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு என்றும் ஒரு மதிப்பு உண்டு. குடிநீர் பிடிக்க ஒன்யூஸ் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என அரசே அறிவித்துள்ளது. பலர் உலோக பொருட்களுக்கு திரும்புகின்றனர். செம்பு உலோகத்தின் பொருட்களை பயன்படுத்துவதால், பல நன்மைகள் உள்ளன. எங்கள் உற்பத்திக்கென எப்போதும் வாடிக்கையாளர்கள் உண்டு.- மனோகர், பாத்திர உற்பத்தியாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ